fbpx

அரபிக்கடலில் உருவானது பைப்போர்ஜாய் புயல்!… சென்னை வானிலை மையம் அலர்ட்!

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு பைப்போர்ஜாய் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் கடந்த 6 மணி நேரத்தில் 4 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பைப்போர்ஜாய் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், கோவாவுக்கு மேற்கே-தென்மேற்கே 920 கி.மீ தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 1,050 கி.மீ தொலைவிலும், போர்பந்தரிலிருந்து தென்-தென்மேற்கே 1,130 கி.மீ தொலைவிலும் போர்பந்தருக்கு தெற்கில் 1,430 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பைப்போர்ஜாய் புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக தீவிரமடைந்து கிழக்கு மத்திய அரபிக்கடலில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Kokila

Next Post

அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் பிபோர்ஜோய் புயல்..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

Wed Jun 7 , 2023
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிபோர்ஜோய் புயல் காரணமாக மகாராஷ்டிரா தொடங்கி கேரளா வரையிலான அரபிக் கடல் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து […]

You May Like