fbpx

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு..!! மக்களுக்கு நிவாரண உதவி வழங்குகிறார் தவெக தலைவர் விஜய்..?

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஃபெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோரத்தாண்டவம் ஆடியது. இதில், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 12 பேர் உயிரிழந்து உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விழுப்புரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது. அதேபோல், சேலம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கந்தம்பட்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டிபி சத்திரம் பகுதி மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நிவாரணம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சுமார் 300 குடும்பங்களை நேரில் வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : BIG BREAKING | சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.10,000..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000..!! முதலமைச்சர் அறிவிப்பு..!!

English Summary

It is reported that Tamil Nadu Victory Party leader Vijay will provide relief assistance to the people affected by Cyclone Fenchal.

Chella

Next Post

Kerala | நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து.. 34 பயணிகளின் நிலை என்ன? - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Tue Dec 3 , 2024
Several injured in collision between KSRTC buses in Kannur.

You May Like