fbpx

மிக்ஜாம் புயல்: ஆந்திரா மாநில முதல்வருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி..! உதவிகள் செய்வதாக உறுதி…

மிக்ஜாம் புயல் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி தெற்கு ஆந்திராவில் உள்ள நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக கனமழையானது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் நிலையில், இந்த மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் தொலைபேசியில் பேசி இருக்கிறார்.

இந்த உரையாடலின் போது மிக்ஜாம் புயல் தொடர்பாக ஆந்திரா மாநிலத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி. மேலும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளதா, இல்லையெனில் மத்திய அரசிடம் உதவி தேவைப்பட்டால், தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் NDRF உள்ளிட்ட அனைத்து விதமான குழுக்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

Kathir

Next Post

நீங்கள் தூங்கும்போதுகூட உடல் எடையை குறைக்கலாம்!… எப்படி தெரியுமா?

Sun Dec 3 , 2023
உடல் பருமன் தான் பல நோய்களுக்கும் மூலக் காரணமாக இருக்கிறது. ஆனால் உடல் எடையை சரியாக பராமரிப்பது அவ்வுளவு எளிதானதல்ல. பலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்சி எடுத்தாலும் கூட அதை தொடர்ந்து கடைபிடிப்பதில்லை. இந்நிலையில் இரவில் தூங்கும் போது கூட, உங்கள் உடல் எடையை குறைக்க வழி உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? அதற்கு முதலில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் தினசரி சரியான பழக்கத்தை கடைபிடித்தால் […]

You May Like