மோச்சா புயலால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் சூறாவளிக் காற்று மண்டலம், மே 9-ஆம் தேதிக்குள் புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆர்எம்சி வெளியிட்ட அறிவிப்பின் படி, `மோச்சா’ என்று பெயரிடப்பட்ட புயல், வடக்கு திசையில் நகரும் என்பதால், தமிழகத்திற்கு தாக்கம் குறைவாக இருக்கும்.
இது மே 9 ஆம் தேதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, பின்னர் மத்திய வங்காள விரிகுடா மற்றும் வடக்கு அந்தமான் கடலை ஒட்டி வடக்கு நோக்கி நகரும் போது புயலாக வலுவடையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.