அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிபோர்ஜோய் புயல் காரணமாக மகாராஷ்டிரா தொடங்கி கேரளா வரையிலான அரபிக் கடல் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயலுக்கு ’பிபோர்ஜோய்’ என பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் மாநிலம் பிபோர்ஜோய் என்ற பெயரை வழங்கியது. பிபோர்ஜோய் என்றால் பேராபத்து என்பது பொருளாம்.
தற்போது அரபிக் கடலில் உருவாகி உள்ள பிபோர்ஜோய் புயலானது வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்த புயல் நாளை தீவிரமடைந்து வலுவானதாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் மகாராஷ்டிரா தொடங்கி கேரளா வரையிலான அரபிக் கடல் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.