fbpx

இன்று கரையை கடக்கும் ‘பைபோர்ஜாய்’ புயல்..!! 50,000 பேர் வெளியேற்றம்..!! வார்னிங் கொடுத்த வானிலை மையம்..!!

குஜராத்தில் ‘பைபோர்ஜாய்’ புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில், கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 50,000 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அரபிக்கடலில் உருவான பைபோர்ஜாய் புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே இன்று மாலை கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக, ஜாம்நகர், துவாரகா, ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. புயல் கரையைக் கடக்கும் போது அதன் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டராக இருக்கும் என்றும் அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த பைபோர்ஜாய் புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகத்தில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தென் – மேற்கு பகுதியில் உள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையொட்டி, கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

இதேபோல், பாகிஸ்தான் கராச்சிக்கு தெற்கே 330 கிலோ மீட்டர் தொலைவில் ‘பைபோர்ஜாய்’ புயல் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, அனைத்து வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகத்தை அந்நாட்டு அரசு நிறுத்தி வைத்துள்ளது.

Chella

Next Post

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..!! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? இனி உடனே கிடைக்கும்..!!

Thu Jun 15 , 2023
வங்கிக் கணக்கு மூலம் குறைந்த வட்டியில் உடனடி கடன் பெறுவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். நாட்டில் உள்ள பல வங்கிகள், சம்பள கணக்கு வைத்திருப்போருக்கு கடன் வழங்குகிறது. ஆகவே, உங்களுக்கும் சம்பளக்கணக்கு இருந்தால் அத்தகைய சலுகை ஏதேனும் இருக்கிறதா என சரிபார்க்கவும். சிறப்பு சலுகைகள் இருப்பின் சில மணிநேரங்களிலேயே கடன் தொகையை உங்களால் பெறலாம். அதேபோல் கிரெடிட் கார்டு வாயிலாகவும் கடன் பெற முடியும். பல்வேறு வங்கிகள் […]

You May Like