fbpx

சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி..!! டீ, காஃபி விலை பல மடங்கு உயர்வு..? பொதுமக்கள் கடும் அதிருப்தி..!!

இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் மக்களுக்கு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த சிலிண்டர் விலையானது எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக படிப்படியாக உயர தொடங்கியது.

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை கடந்த 2020 மே மாதம் முதல் 2023 மார்ச் 1ஆம் தேதி வரை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், மார்ச் முதல் நாள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. அதே நேரம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.351 உயர்த்தப்பட்டு ரூ.2,268-க்கு விற்பனையாகிறது. சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டுள்ளனர். இதையடுத்து, டீ-காஃபி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

ரூ.3,108.09 கோடி செலவில் 3 பயிற்சிக் கப்பல்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!

Fri Mar 3 , 2023
கடற்படை வீரர்களுக்கான 3 பயிற்சிக் கப்பல்களை வாங்க லார்சன் & டப்ரோ (எல்&டி) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.3,108.09 கோடி செலவில் வாங்கப்படவுள்ள இந்தக் கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைத்து மேம்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படுவது என்ற பிரிவின் கீழ் வாங்கப்பட உள்ளன. இந்தக் கப்பல்களை 2026-ம் ஆண்டு முதல் எல்&டி நிறுவனம் வழங்கத் தொடங்கும். இந்தக் கப்பல்கள் கடற்படையில் பெண்கள் உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகளின் பயிற்சித் […]
தேநீர் விருந்து அழைப்பு..! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய கடிதம்..!

You May Like