fbpx

கடந்த 5 ஆண்டுகளில் 58 முறை திருத்தப்பட்ட சிலிண்டர் விலை.. 45% விலை உயர்வு..

எல்பிஜி சிலிண்டர் விலை கடந்த 5 ஆண்டுகளில் 58 முறை திருத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எல்பிஜி சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. எனினும் இதில் கவனிக்க வேண்டிய ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை 58 முறை வகையில் திருத்தப்பட்டுள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஏப்ரல் 1, 2017 மற்றும் ஜூலை 6, 2022 இடையே 58 முறை சிலிண்டர் விலை 45 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு எல்பிஜி சிலிண்டரின் விலை ஏப்ரல் 2017 இல் ரூ.723 ஆக இருந்தது, ஜூலை 2022ல் 45 சதவீதம் உயர்ந்து ரூ.1,053 ஆக உயர்ந்துள்ளது..

அதே சமயம், ஜூலை 1, 2021 முதல் ஜூலை 6, 2022 வரையிலான 12 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் இந்த உயர்வு 26 சதவீதமாக இருந்தது. ஜூலை 2021 இல் இதே எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 834 ஆக இருந்தது. ஜூலை 2022க்குள் , இதன் விலை 26 சதவீதம் உயர்ந்து ரூ.1,053ஐ தொட்டது.

ஒவ்வொரு மாநிலத்திலும் எல்பிஜி சிலிண்டர் விலைகள் மாறுபடும்.. ஏனெனில் அவை மதிப்புக் கூட்டு வரி அல்லது வாட் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களைப் பொறுத்தது. கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையிலும் சிலிண்டர் விலை கணக்கிடப்படுகின்றன. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்துடன் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை பலவீனப்படுத்தினாலும், சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக சாமானிய மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்..

Maha

Next Post

கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!

Sat Sep 3 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 7,219 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 33 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 56,745 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like