fbpx

புத்தாண்டை முன்னிட்டு சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது..! எவ்வளவு தெரியுமா..?

2025 ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1) வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவை வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.20 கிலோ எடை மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையில் சமையல் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில், ஜனவரி 1ஆம் தேதியான இன்று 2025ஆம் ஆண்டின் முதல் நாள் என்பதால், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.818.59 ஆக நீடிக்கிறது. கடந்த 3 மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இந்த மாதம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read More : சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமா..? மீண்டும் ஏமாற்றிய மத்திய அரசு..!! அதிருப்தியில் மக்கள்..!!

English Summary

The price of a commercial cooking gas cylinder has been reduced by Rs. 14.50 and is being sold at Rs. 1,966.

Chella

Next Post

புத்தாண்டில் உலக மக்கள் தொகை 809 கோடியாக உயர்வு!. 2024ல் மட்டும் 7.1 கோடி உயர்வு!. வெளியான ரிப்போர்ட்!

Wed Jan 1 , 2025
In the New Year, the world's population will rise to 809 crore! 7.1 crore rise in 2024 alone!. Published report!

You May Like