fbpx

காப்பி போடும் போது நேர்ந்த விபரீதம்; சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்..

நாம் எவ்வளவு ஜாக்கரதையாக இருந்தாலும் மரணம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நிகழும். அந்த வகையில் கணவன் மனைவியாக சந்தோசமாக வாழ்ந்து வந்த தம்பதிக்கு காப்பி போடும் போது ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா குப்பதஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இருவரும் கோலார் தாலுகா மணிகட்டா சாலையில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். இருவரும் வசித்து வந்த வீடு மசூதன் என்பவருக்கு சொந்தமானது. கணவன் மனைவி இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் கிரிஷ் மற்றும் நந்தினி இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, இருவரின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காபி போடும் போது, சிலிண்டர் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோலார் புறநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Maha

Next Post

மாணவர்களுக்கு நடைப்பெற்ற காலாண்டு தேர்வு; பதற்றத்தில் ஆசிரியை உயிரிழப்பு..

Sat Sep 23 , 2023
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே பள்ளியில் ஆசிரியை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கத்தில் உள்ள புனித தோமையார் துவக்கப்பள்ளியில் 53 வயதான அன்னாள் ஜெயமேரி என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இவர் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு, ‘எமிஸ்’ எனும் கல்வித்துறை செயலி வாயிலாக காலாண்டு தேர்வை நடத்தியுள்ளார். மேலும் அதில் விவரங்களைப் […]

You May Like