திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, சிறுவனின் உதட்டில் முத்தமிடுவதும் தனது நாக்கை நீட்டி அதில் முத்தமிடச் சொல்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தனது காலில் விழுந்த சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் தலாய்லாமா, பின் தனது நாக்கை நீட்டி சிறுவனது நாக்கை அதில் படுமாறு வைக்கச் சொல்கிறார். ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவின் இந்த செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு, தனக்குப் பின் தலாய்லாமாவாக ஒரு பெண் வந்தால் அவர் மிக அழகாக இருக்க வேண்டும் என பேசியது சர்ச்சை ஆனது. இதற்கு பின் தலாய்லாமா மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், தலாய்லாமாவின் இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டங்களைப் பெற்று வருகிறது.