fbpx

அடடே..!! இதுவும் சும்மா இருக்காது போலயே..!! நிலவில் விக்ரம் லேண்டர் என்ன செய்து கொண்டிருக்கிறது..? இஸ்ரோ புதிய தகவல்..!!

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் கடந்த 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பின்னர், விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதன்படி, ரோவர் சந்திர மண்ணை நகர்த்தி ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, அவ்வபோது விக்ரம் லேண்டர் தரையிறங்கும் புகைப்படங்கள், தரையிறங்கிய பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ரோவர் வெளியேறும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு வந்தது. இந்நிலையில் விக்ரம் லேண்டர் நிலவின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதாவது, விக்ரம் லேண்டரில் 10 சென்சார்கள் மூலம் வெப்பநிலை கண்காணிக்கப்படுவதாகவும், விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்ட கருவியான CHASTE, நிலவின் மேற்பரப்பில் முதல் வெப்பநிலை அளவீடுகளை பதிவு செய்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் 10 சென்டிமீட்டர் வரை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆன ஒரு வருடத்திற்குள் இறப்பு!… இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!… ICMR!

Sun Aug 27 , 2023
கொரோனா தொற்றுக்கு ஆளான நோயாளிகளில் 6.5% பேர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஓராண்டுக்குள் இறந்ததாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நெட்ஒர்க்கின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஆய்வின் முடிவில், ‘நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன், குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 60% பாதுகாப்பை வழங்கியது. 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், இணைநோய் (Comorbidities) பாதிப்பு இருந்தவர்கள் மற்றும் கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனையில் […]

You May Like