fbpx

அடச்சீ…!! பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்..!! உடனே ஆக்‌ஷன் எடுத்த முதல்வர்..!! வைரல் வீடியோ..!!

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருக்க அவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற நபர் சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை கண்டித்து எதிர்கட்சிகள் கடுமையான விமர்சித்த நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கவனத்துக்கும் சென்றுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ”பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் மீது சிறுநீர் கழிக்கும் வீடியோ என கவனத்திற்கு வந்தது. சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார்.

முதல்வரின் உத்தரவுக்கு பின் சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா மீது இந்திய தண்டனை சட்டத்தின் 294, 504 ஆகிய பிரிவுகள், வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரவேஷ் சுக்லா ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதற்கு பதிலளித்த முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் ‘குற்றவாளிக்கு மதம், ஜாதி, கட்சி போன்ற பாகுபாடு கிடையாது. எனது கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை கைது செய்வதில் இருந்து காப்பாற்றப்பட மாட்டார்’ என தெரிவித்தார்.

இதுகுறித்து மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் கூறுகையில், ‘ பழங்குடியின மக்களுக்கு எதிராக இவ்வளவு மோசமான குற்றம் நாகரீக சமூகத்தில் நடப்பது வேதனை அளிக்கிறது. சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது’ என தெரிவித்தார்.

Chella

Next Post

உச்சத்தை எட்டிய இஞ்சி விலை...! இன்று கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை...!

Wed Jul 5 , 2023
சென்னையில் இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு காய்கறி சந்தையில்‌ இஞ்சி இன்று கிலா ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ ரூ.270 முதல்‌ ரூ.260 வரை விற்பனை செய்யப்பட்‌‌ நிலையில்‌ இன்று விலை அதிகரித்துள்ளது.

You May Like