fbpx

அடடே சூப்பர்..!! பேருந்தை தொடர்ந்து ரயிலிலும் இந்த வசதியா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

இந்திய ரயில்வே மற்றும் தபால் துறை இணைந்து புதிய பார்சல் சேவையை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக பல புதிய அறிவிப்புகளை இந்திய ரயில்வே அவ்வபோது வெளியிட்டு வருகிறது. தற்போது போக்குவரத்தை தொடர்ந்து மக்களுக்கு பார்சல் சேவையை வழங்கி வருகிறது. ரயில் மூலமாக நீங்கள் எந்த ஒரு பொருளையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப முடியும். நீங்கள் அனுப்பக்கூடிய பொருளின் எடை மற்றும் தூரம் ஆகியவற்றை பொறுத்து குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும்.

அடடே சூப்பர்..!! பேருந்தை தொடர்ந்து ரயிலிலும் இந்த வசதியா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

இந்நிலையில், ரயில்வே துறை தபால் துறையுடன் இணைந்து பார்சல் சேவையை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக சூரத் மற்றும் வாரணாசி இடையே ரயில்வே மற்றும் தபால் துறை இணைந்து புதிய பார்சல் சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலமாக தபால் துறையிடம் இருந்து ரயில்வே துறை பார்சல்களை பெற்று உரிய இடத்திற்கு அனுப்பும். இந்த சேவை தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை மற்றும் கோவை போன்ற பெரிய நகரங்களில் இந்த சேவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Chella

Next Post

2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து ரேஷன் கடைகளில் கட்டாயம்...! மத்திய அரசு உத்தரவு....!

Tue Dec 20 , 2022
நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை ஆராயுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத் துறை செயலர்களை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுத்துறை செயலர்கள் மாநாட்டில், தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படும் பொது விநியோக நடைமுறைகள் பற்றி அதன் செயலாளர் விளக்கினார். உணவு தானியங்கள், மளிகை பொருட்கள், திணை வகைகள் […]

You May Like