fbpx

அடடே சூப்பர்..!! பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை..!! என்னென்ன வசதிகள் உங்களுக்கு கிடைக்கும் தெரியுமா..?

பெங்களூருவில் இயங்கி வரும் அனக்கின் (Anakin) ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ”பிரேக்பாஸ்ட் + லஞ்ச் + சம்பளம்” வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பெங்களூருவில் தான் இயங்கி வருகின்றன. அப்படியாக அனக்கின் (Anakin) எனும் ஐடி நிறுவனமும் அங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், இந்நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, அனக்கின் நிறுவனத்தின் சாப்ட்வேர் டெவலப்மென்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக பிடெக், எம்டெக், பிரிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருந்தால் சிறப்பானது. இந்த பணிக்கு 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது ஒரு ஆண்டு Internship அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் Backend Programming Languages அல்லது Full Stack உள்ளிட்டவற்றை நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு Beautiful Soup, Selenium, Scarpt தெரிந்திருக்க வேண்டும். எச்டிஎம்எல், சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றை புரிந்து வைத்திருக்க வேண்டும்.

மேலும் Web crawling, Scraping Knowledge, Reverse Engineering, Rdis, Kubernotes, Django/Flask தெரிந்திருக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு முன்னுரிமை. டெக்னீக்கல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேசன் திறமை வைத்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுககு மெடிக்கல் இன்சூரன்ஸ் வசதி உண்டு. மேலும், பணியின்போது அவலகத்திலேயே காலை மற்றும மதிய உணவு வழங்கப்படும். இந்த பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் மற்றும் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறித்த விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூருவில் பணியமர்த்தப்படுவார்கள்.

Read More : ’இனி கரண்ட் பில் பிரச்சனையே வராது’..!! ரூ.75,000 மானியம்..!! மின்சாரத்தை விற்றும் லாபம் பார்க்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Chella

Next Post

2வது டெங்கு தடுப்பூசி!… TAK-003-க்கு உலக சுகாதார அமைப்பு முன்ஒப்புதல்!

Fri May 17 , 2024
2nd Dengue Vaccine: டெங்கு காய்ச்சலுக்கான 2வது தடுப்பூசியாக அறிவிக்கப்பட்ட TAK-003-க்கு உலக சுகாதார அமைப்பு முன் ஒப்புதல் வழங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) டெங்கு காய்ச்சலுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது, டெங்கு காய்ச்சலுக்கு எதிரான TAK-003 என்ற புதிய தடுப்பூசியை கடந்த 10ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தடுப்பூசிய டகேடா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த வகை தடுப்பூசி, live-attenuated வகையை […]

You May Like