fbpx

’அடடே இது நல்லாருக்கே’..!! வீடு வாங்கினால் மனைவி இலவசம்..!! ரியல் எஸ்டேட் விளம்பரத்தால் வெடித்த சர்ச்சை..!!

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் பொருளாதாரம் இப்போது மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்க கூட இதை ஒப்புக்கொண்டு இருந்தார். சீனாவின் வளர்ச்சிக்கு இத்தனை காலமாக ரியல் எஸ்டேட் துறை தான் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், இப்போது இந்த துறையிலும் சுணக்கம் இருக்கும் நிலையில், விற்பனையை அதிகரிக்க பல வினோதமான முறைகளில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். அப்படி ஒரு விளம்பரம் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

சீனா பொருளாதாரத்தின் மீது அந்நாட்டு மக்களுக்கே நம்பிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே அவர்கள் பிற முதலீடுகளைச் செய்யத் தயக்கம் காட்டுகின்றனர். நீண்ட காலத்திற்கு இதே நிலை தொடர்ந்தால், அது சீன பொருளாதாரத்தைக் கூட அழிக்கும் அபாயம் உள்ளது. இதற்கிடையே, ரியல் எஸ்டேட் விற்பனையை பூஸ்ட் செய்ய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் செய்துள்ள வினோதமான யுக்தி தான் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சீனாவின் தியான்ஜினில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் “வீடு வாங்குங்கள், மனைவியை இலவசமாகப் பெறுங்கள்” என்ற விளம்பரத்தை ஒளிபரப்பியது. இது மக்களிடம் தங்கள் நிறுவனத்தை எடுத்துச் செல்ல உதவும் என்றும் இது வீடுகளின் விற்பனையை பூஸ்ட் செய்யும் என்றும் அந்த நிறுவனம் நினைத்திருந்தது. அதற்கேற்ப இந்த விளம்பரம் சீனாவில் டிரெண்டானது. ஆனால், மக்களின் ரியாக்ஷன் என்பது நேர் எதிராகவே இருந்துள்ளது.

பொதுமக்கள் இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாகப் பெண்கள் இந்த விளம்பரத்தை மிகக் கடுமையாகச் சாடினர். பெண்களை எதோ பரிசு பொருட்களைப் போலக் காட்டும் இந்த விளம்பரத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது மிகப் பெரிய சர்ச்சையாகவே, அந்நாட்டின் ரியல் எஸ்டேட் கண்காணிப்பு அமைப்பு விசாரணையில் இறங்கியது. அப்போது, அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் தங்கள் விளம்பரத்தைப் பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொண்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.

ஒரு வீட்டை வாங்கி, அதை உங்கள் மனைவிக்குக் கொடுங்கள் என்பதே தங்கள் விளம்பரம் என்றும் அதை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதாக விளக்கம் அளித்தனர். இருப்பினும், அந்த நிறுவனத்திற்கு 3 லட்சம் அபராதம் விதித்த சீன கண்காணிப்பு அமைப்பு விளம்பரத்தை உடனடியாக நிறுத்தவும் அறிவுறுத்தியது.

Chella

Next Post

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்தி தண்ணீர்...! அதிகாரிகள் அதிரடி சோதனை...!

Sat Jan 27 , 2024
போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆலையில் பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழு, BIS சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், MJS Enterprises சந்தைமேடு, மூங்கில்தோரைப்பட்டு, சங்கராபுரம் தாலுகா, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது அதிகாரிகள் BIS சட்டம் 2016 இன் பிரிவு […]

You May Like