முன்பெல்லாம் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் இ – சேவை மையத்திற்கோ அல்லது தாலுகா அலுவலகத்திற்கோ தான் செல்ல வேண்டும். ஆனால், தற்போது இணையதள வசதியுடன் இருக்கும் இடத்தில் இருந்து பட்டா மாறுதல் செய்ய முடியும். அது குறித்த முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய tamilnilam.tn.gov.in என்ற இணையதள சேவையை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்றவுடன் முதலில் உங்களது பெயர், செல்போன் எண், இ-மெயில் முகவரியை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பின்னர், பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டியது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர், உங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நிலத்தின் விவரங்களை குறிப்பிட வேண்டும். அது எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே நம்பர் மற்றும் சப்-டிவிஷன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, இந்த நிலம் உங்களுக்கு சொந்தமானதற்கு என்பதற்கான சான்றாக கிரைய பத்திரம் உள்பட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இறுதியாக உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு ரூ.60-ம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460-ம் கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர், உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும். அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்வார்கள்.
Read More : இந்த மாற்றங்கள் எல்லாம் உங்க உடலில் இருக்கா..? கவனிக்காம விட்றாதீங்க..!! புற்றுநோய் ஆபத்து..!!