fbpx

BP-யை கட்டுக்குள் வைக்கும் 2 பொருட்கள்..!! நீங்களே வீட்டில் செய்யலாம்..!!

அதிகப்படியான கோபம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு (BP) ஏற்படுகிறது. இந்த BP செலவின்றி இயற்கை முறையில் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தற்போது பார்க்கலாம்.

கடுக்காய்

இந்த கடுக்காயில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் உள்ளன. வாதம், பித்தம், கபம் உள்ளிட்ட பிரச்சனைகளை குணமாக்க இது உதவுகிறது. மேலும், குடல் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.

சீரகம்

சீரகமானது, செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

1. ஒரு கடுக்காயை உரலில் போட்டு இடித்து அதன் தோலை நீக்கி, அதில் உள்ள விதையை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு ஆறவைத்து ஒரு கிளாஸில் வடிகட்டி காலை உணவு உட்கொண்ட பிறகு குடிக்கலாம். இவ்வாறு தினமும் செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

2. அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில், 1/4 கப் முருங்கை இலை, மஞ்சள் தூள் சிறிதளவு, ஒரு பல் இடித்த பூண்டு மற்றும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து காய்ச்சி குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

Read More : கூகுளில் நீங்களும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமா..? இந்த ஈசியான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

English Summary

High blood pressure (BP) is caused due to excessive anger, stress etc. Now let’s see how to control this BP naturally without cost.

Chella

Next Post

’இந்த உலகம் நல்ல மனிதரை இழந்துவிட்டது’..!! 'Tarzan' நடிகர் ரோன் ஈலய் காலமானார்..!! மகள் உருக்கமான பதிவு..!!

Thu Oct 24 , 2024
Tarzan actor Ron Elay has died at the age of 86. His daughter Kirsten confirmed the news on her Instagram page.

You May Like