fbpx

தொடர் மழையால் நிரம்பிய அணைகள்..! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில். நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 50,000 கன அடியாக இருந்தது. இந்நிலையில், இன்று காலை மேட்டூர் அணைக்கு 55,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

தொடர் மழையால் நிரம்பிய அணைகள்..! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு..!

குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 25,000 கன அடியாக உயர்ந்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 32,000 கனஅடி 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 55,600 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

தொடர் மழையால் நிரம்பிய அணைகள்..! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு..!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

Chella

Next Post

காலை உணவு திட்டத்தின் குறிக்கோள்..! பள்ளிகளின் விவரம்..! தமிழக அரசு முக்கிய உத்தரவு..!

Thu Sep 15 , 2022
தமிழகத்தில் முதற்கட்டமாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) படிக்கும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த […]
’நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்குவதே முதல் இலக்கு’..! முக.ஸ்டாலின் நெகிழ்ச்சி

You May Like