fbpx

கௌதமியின் இடத்தை நிரப்பிய டான்ஸ் மாஸ்டரின் மனைவி..!! கமலுக்கு இவர்தான் வலது கையாம்..!!

நடிகராகவும், பன்முக கலைஞராகவும் இருக்கும் கமல்ஹாசன், சினிமாவில் உச்சத்தை தொட்டிருந்தாலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை, சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது. 2 மனைவிகளையும் விவாகரத்து செய்தது தொடங்கி பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டது வரை பல சர்ச்சைகளில் சிக்கினார். 1978இல் தனது 24 வயதில், நடன கலைஞரான வாணி கணபதியை கமல் திருமணம் செய்து கொண்டார். பிறகு, வாணி ஆடை வடிவமைப்பாளராக பல படங்களில் பணியாற்றினார். எனினும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் விவாகரத்து செய்தனர்.

பின்னர் நடிகை சரிகாவை கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்ட சரிகா, கமலின் ஹே ராம் திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். எனினும் இந்த தம்பதி 2005ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டனர். 2005 – 2016 வரை, கமல்ஹாசன் நடித்த நடிகை கௌதமியுடன் லின் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அப்போது கௌதமி கமல்ஹாசனின் திரை வாழ்க்கையிலும், பிசினஸிலும் பக்க பலமாக இருந்து வந்தார். எனினும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பால் கமல்ஹாசனை விட்டு கௌதமி பிரிந்துவிட்டார்.

இதை தொடர்ந்து திரைப்படங்கள், பிக்பாஸ், அரசியல், தேர்தல் என கமல்ஹாசன் பிசியாகிவிட்டார். இந்நிலையில், தற்போது கமலுக்கு வலது கை போல் செயல்படும் பிரபலம் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒரு டான்ஸ் மாஸ்டரின் மனைவியான இவர் கமல்ஹாசனின் காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார். இந்தியன் 2, தக் லைஃப் படங்களுக்கு இவர் தான் ஆடை வடிவமைப்பாளர். அவர் வேறு யாருமில்லை நடிகரும், டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் மனைவி அமிர்தா ராம். ராஜ் டிவியில் புரோடியூசராக இருந்த பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அணியும் உடைகளை வடிவமைப்பதும் இவர் தானாம்.

மேலும் இவர் தான் கமலுக்கு எல்லாம் என்று சொல்லும் அளவுக்கு அவரின் சினிமா, பிசினஸ் இரண்டையும் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டாராம். கௌதமி விட்டுப்போன இடத்தை இவர் தான் தற்போது நிரப்பி உள்ளாராம். கமலின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக மாறிவிட்டாராம். எனவே, இவரிடம் தான் கமல் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துள்ளாராம். இவர் தான் தற்போது கமலின் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

குப்பைமேட்டில் வளரும் எருக்கன் செடியில் பால்வினை நோய்களுக்கு மருந்து இருக்கா.? நம்பமுடியாத மருத்துவ நன்மைகள்.!

Fri Dec 15 , 2023
பராமரிக்கப்படாத இடங்கள் வறண்ட நிலங்கள், சாலைகள், ஆறு, குப்பைமேனி என எல்லா இடங்களிலும் வளர்ந்து இருக்கும் எருக்கஞ்செடியில் ஏராளமான மருத்துவ நன்மைகள் கொட்டி கிடப்பதாக சித்தமருத்துவம் தெரிவிக்கிறது. இவற்றின் இலை, பூ, தண்டு என அனைத்தும் மருத்துவ பயன்களை கொண்டிருக்கின்றன. இந்தச் செடியிலும் இவ்வளவு நன்மை இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது இந்த தாவரம். இந்தச் செடியின் இலையைச் சாறு எடுத்து அதனுடன் மஞ்சள் […]

You May Like