fbpx

டான்செட், சீட்டா தேர்வு..!! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான (2024) டான்செட் தேர்வு மார்ச் 9ஆம் தேதியும், சீட்டா தேர்வு மார்ச் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”டான்செட், சீட்டா தேர்வுகள் தமிழ்நாட்டில் 14 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜனவரி 10) தொடங்கி பிப். 7 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் tancet.annauniv.edu/tancet எனும் வலைதளம் மூலம் விண்ணப்பப் படிவங்களை சமர்பிக்கலாம். கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அவர்கள் மாணவர் சேர்க்கையின் போது சான்றிதழ்களை சமர்ப்பித்தால் போதும். தேர்வு முடிவு மார்ச் இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். மேலும், விவரங்களை மேற்கண்ட அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

களைகட்டும் மதுரை ஜல்லிக்கட்டு!… இன்று முதல் முன்பதிவு!… கட்டுப்பாடுகள் இதோ!

Wed Jan 10 , 2024
மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்கவுள்ளது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடத்த முடிவு […]

You May Like