fbpx

சென்னைக்கு மீண்டும் ஆபத்தா..? டெல்டா பகுதி மக்களே உஷார்..!! வெதர்மேன் கொடுத்த அப்டேட்..!!

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், வரும் 17ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (15.12.2023) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் நாளை (16.12.2023) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 17ஆம் தேதி தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதற்கிடையே, சென்னையில் வருகிற 18ஆம் தேதி மீண்டும் புயல் தாக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை மறுத்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதி மக்கள் மழை தொடர்பாக அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். வருகிற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மழைக்கான ஹாட் ஸ்பாட்டாக டெல்டா மாவட்டங்களும், தென் மாவட்டங்களும் இருக்கும் என கூறியுள்ளார்.

Chella

Next Post

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நகரத் தொடங்கியது..!! பல நகரங்கள் மூழ்கும் அபாயம்..!! ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!!

Fri Dec 15 , 2023
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை திடீரென நகரத் தொடங்கியிருக்கும் நிலையில், இதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பூமியின் இரண்டு துருவங்களிலும் பனிப்பாறைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். பல நூறு ஆண்டுகளாக இந்த பனிப்பாறைகள் அங்கேயே தான் இருக்கிறது. ஆனால், கடந்த நூற்றாண்டு முதல் இதில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஏதோ ஒரு ஓரத்தில் இருக்கும் இந்த பனிப்பாறைகளில் நடக்கும் மாற்றங்கள் நம்மை எப்படிப் பாதிக்கும் என […]

You May Like