fbpx

’ஆபத்து வந்துருச்சு’..!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

“புயல் உருவாகி உள்ளதை” குறிக்கும் வகையில் நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாளை (அக்.25) நண்பகலில் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வங்காளதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புயல் உருவாகி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

மாஸ்...! "கஸ்தூரி காட்டன் பாரத்" புதிய டிஜிட்டல் இணையதளத்தை தொடங்கிய மத்திய அரசு...!

Tue Oct 24 , 2023
மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கஸ்தூரி காட்டன் பாரத் https://kasturicotton.texprocil.org என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். கஸ்தூரி காட்டன் பாரத் பிராண்டை உற்பத்தி செய்ய ஜின்னர்களுக்கான பதிவு செயல்முறை மற்றும் பிராண்டட் இந்திய பருத்தியை தனித்துவமாக்கும் அதன் செயல்முறைகளை முன்னிலைப்படுத்துகிறது. இந்த முன்முயற்சிகள் குறித்த தேவையான தகவல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு ஒரு டிஜிட்டல் தளத்தையும் இந்த இணையதளம் வழங்குகிறது. கஸ்தூரி காட்டன் பாரத் […]

You May Like