பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் நாடு என்ற சிறப்பை பெற்றிருந்தாலும் இயற்கை சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் உள்ளது. நிலநடுக்கம், புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலைகளும் அதிகளவில் உள்ளன. இதனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி எரிமலை சீற்றம் ஏற்படுகிறது. இதனையொட்டி, பிலிப்பைன்சின் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் லூசன் தீவில் பல ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரபல சுற்றுலா தலமான மேயோன் நகரில் உள்ள எரிமலைக்கான எச்சரிக்கையை 2-வது நிலைக்கு உயர்த்தியது எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம். இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. மலைச்சரிவுகள் மற்றும் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தால் மேயோன் எரிமலையில் இருந்து 6 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதே போல், மேயோன் நகரில் உள்ள எரிமலையின் மேல் பரப்பில் அல்லது அருகில் விமானங்கள் பறக்க வேண்டாம் என விமான போக்குவரத்து அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.