fbpx

“ இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்திற்கு ஆபத்து..” பிரதமர் மோடி மீது நியூயார்க் டைம்ஸ் விமர்சனம்..

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் ஆபத்தில் உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான மோடியின் இறுதித் தாக்குதல் தொடங்கியது’ (Modi’s Final Assault on India’s Press Freedom Has Begun’) என்ற தலைப்பில் நியூடார்க் டைம்ஸ் நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி “காஷ்மீரி பத்திரிகையை அழித்துவிட்டார்” மற்றும் “ஊடகங்களை அரசாங்க ஊதுகுழலாக பணியாற்ற மிரட்டுகிறார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தேசிய அளவில் இதே முறையை மோடி பிரதிபலிக்கிறார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் “ இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான சகிப்புத்தன்மை மற்றும் வன்முறையை இயல்பாக்கியது, பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, ஊடகங்களுக்கு எதிராக பலமான தந்திரங்களை பயன்படுத்தி சாதகமான செய்தி வெளியிடுவதை மோடி அரசு உறுதி செய்தது.. இந்தியாவின் பெருமைக்குரிய விஷயங்களில் ஒன்றான பத்திரிகை சுதந்திரம் தற்போது ஆபத்தில் உள்ளது..

2019 ஆம் ஆண்டில், மோடியின் அரசாங்கம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை, அம்மாநில மக்களின் ஒப்புதல் இல்லாமல் திடீரென ரத்து செய்தது. ஆயிரக்கணக்கான ராணுவ படைகளை அனுப்பியது.. இணைய அணுகலை முடக்கியது. இந்த நிலை கிட்டத்தட்ட 6 மாதங்கள் நீடித்தது..” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

“பிரிவினைவாத இயக்கத்தின் முக்கிய தலைவரான சையத் அலி ஷா கிலானி 2021 இல் இறந்தபோது, அந்த செய்தி காஷ்மீரில் இருட்டடிப்பு செய்யப்பட்டது அல்லது சுருக்கமாக மட்டுமே குறிப்பிடப்பட்டது. கடந்த மாதம், அரசாங்கம் சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் கூறிய ஆயிரக்கணக்கான வீடுகளை இடிக்கும் முயற்சியைத் தொடங்கியது. இறுதியாக, இந்தியாவின் ஜனநாயக கொள்கைகளை பிரதமர் மோடி திட்டவட்டமாக இழிவுபடுத்துகிறார்..” என்று பல குற்றச்சாட்டுகளுடன் அது முடிவடைகிறது.

முன்னதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது லண்டன் பயணத்தின் போது, பிரதமர் மோடி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலில் இருப்பதாக கூறியிருந்தார்.. இந்த சூழலில் நியூயார்க் டைமஸ் நாளிதழ் இதே போன்ற ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது..

இந்நிலையில் இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர், அனுராக் தாக்கூர் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ சில வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியா மீது வெறுப்பை வளர்க்கின்றன. இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மற்ற அடிப்படை உரிமைகளைப் போலவே புனிதமானது. இந்தியாவில் ஜனநாயகம் மேன்மை அடைந்துள்ளது.. மக்களாகிய நாமும் மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளோம், இதுபோன்ற ஊடகங்களிலிருந்து ஜனநாயகத்தின் இலக்கணத்தை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.. காஷ்மீரில் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் பரப்பும் அப்பட்டமான பொய்கள் கண்டிக்கத்தக்கது.. இந்தியர்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்..

2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்துடன், பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி ” India : The Modi Question..” என்ற ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.. இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, அதனை தடை செய்திருந்த நிலையில், தடையை மீறி சில இடங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.. இதை தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாத சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Maha

Next Post

ஓய்வுபெற்ற அக்னி வீரர்கள் எல்லை பாதுகாப்பு படையில் சேர வாய்ப்பு!... இடஒதுக்கீடு அளித்து மத்திய அரசு அறிவிப்பு!

Sat Mar 11 , 2023
ஓய்வுபெற்ற அக்னி வீரர்களுக்கு துணை ராணுவமான எல்லை பாதுகாப்பு படையில் சேருவதற்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அக்னிவீரர்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படையில் பணியாற்றலாம் . அதற்கு பிறகு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பணியில் நீட்டிக்கப்படுவர். மற்றவர்கள் வேறு வேலைக்கு செல்ல வேண்டும். தற்போது, அப்படி ஓய்வு பெற்ற […]

You May Like