fbpx

’உங்கள் வாகனத்திற்கு ஆபத்து’..!! ’இந்த ஸ்டிக்கர் இருந்தால் உடனே கிழிச்சிருங்க’..!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களுக்கு குறிப்பிடும் ‘G’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், ‘இந்திய அரசு’, ‘தமிழ்நாடு அரசு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், அரசு சின்னங்களையும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசு என வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் வாகனங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், விதிமீறல்களுக்கு எதிராக வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கோர முடியும் என தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனால், மனுவில் கோரிக்கையை திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற விதிமீறல்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chella

Next Post

பெண்களுக்கு இலவச திருமணம்..!! முதலமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!! மகழ்ச்சியில் பொதுமக்கள்..!!

Mon Sep 11 , 2023
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதல்வராக நீடித்தது கிடையாது. ஆனால், இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ‘முதலமைச்சரின் வெகுஜன திருமணத் திட்டம்’ என்ற […]

You May Like