எத்தனை தடுப்பூசிகள் வந்தாலும் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.. 4-வது அலை, 5-வது அலை என கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது.. இந்நிலையில் சீனாவில் மற்றோரு ஆபத்தான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.. சீனாவில் ஜூனோடிக் லாங்யா வைரஸ் (Zoonotic Langya) என்ற நோய் பரவி வருகிறது.. இதுவரை 35 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த வைரஸ் கடுமையான கல்லீரல் மற்றும் சிறுநீரக தொற்றுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்..
லாங்யா வைரஸ் தொற்று எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வுகளில் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டது. இந்த நோயாளிகளுக்கு விலங்குகள் மூலம் வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.. சீனாவின் இரண்டு மாகாணங்களில் 35 பேர் லாங்யா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில், 26 நோயாளிகளுக்கு லாங்யா வைரஸ் தொற்று மட்டுமே இருந்தது மற்றும் பிற நோய்த்தொற்றுகள் இல்லை. இந்த நோயாளிகளிடமிருந்து லாங்யா வைரஸின் முக்கிய அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இந்த வைரஸ் ஹெனிபாவைரஸ் இனத்தைச் சேர்ந்தது, இது ஹெண்ட்ரா வைரஸ் (HeV) மற்றும் நிபா வைரஸ் (NiV) போன்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததாகும்..
லாங்யா வைரஸின் முக்கிய அறிகுறிகள்
- காய்ச்சல்: 100 சதவீத நோயாளிகளில்
- சோர்வு: 54 சதவீதம்
- இருமல்: 50 சதவீதம்
- பசியின்மை: 50 சதவீதம்
- தசை வலி: 46 சதவீதம்
- குமட்டல்: 38 சதவீதம்
- தலைவலி: 35 சதவீதம்
- வாந்தி: 35 சதவீதம்
- இரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் குறைபாடு : 35 சதவீதம்
- இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைபாடு: 54 சதவீதம்
- பலவீனமான கல்லீரல்: 35 சதவீதம்
- பலவீனமான சிறுநீரகம்: 8 சதவீதம்
லாங்யா வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகிறதா? மனிதனிடமிருந்து மனிதனுக்கு வைரஸ் பரவுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் பெரியதாக இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் என்று என ஏற்கனவே வெளியான அறிக்கைகள் பரிந்துரைத்தாலும், மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இது எவ்வளவு ஆபத்தானது? ஹெனிபவைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோய்களை ஏற்படுத்தும். உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, இறப்பு விகிதங்கள் 40-75 சதவீதத்திற்கு இடையில் உள்ளன. இது கொரோனா வைரஸை விட மிக அதிகம்.
என்ன சிகிச்சை ? தற்போது, ஹெனிபவைரஸுக்கு தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை.