வெளி இடங்களில் சார்ஜ் செய்தால், உங்கள் மொபைல்களில் உள்ள தகவல்கள் திருட்டு போகலாம் என சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கோடைகாலம் வரும் நிலையில், பலரும் வெளியூருக்கு செல்ல திட்டமிடுவார்கள். அப்போது நிச்சயம் ஒரு கட்டத்தில் உங்களுடைய மொபைல்களுக்கு சார்ஜ் போட வேண்டிய சூழல் வரும். அப்படி சார்ஜ் போடும்போது உங்கள் மொபைல்களில் தகவல்கள் திருடப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உங்கள் மொபைல் போன் சார்ஜ் செய்யும் போது, USB சார்ஜிங் நிலையங்களில் தீம்பொருளை அல்லது வைரஸ்கள் ஏற்றலாம் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்படி USB Port மூலம் ஏற்றப்படும் தீம்பொருட்கள் உங்களது மொபைலை லாக் செய்யலாம் அல்லது உங்கள் மொபைலில் இருக்கும் தகவல்கள், புகைப்படங்கள் அல்லது பாஸ்வார்ட்கள் என அனைத்தையும் குற்றவாளிகளுக்கு அனுப்பலாம் என கூறுகின்றனர்.
மேலும், அந்த தகவல்களை அவர்கள் இணையத்தில் யாருக்கேனும் விற்கலாம் எனவும் எப்படியும் பயன்படுத்தலாம் எனவும் எச்சரிக்கின்றனர். எனவே, உங்களது தகவல்கள் திருட்டு போகாமல் இருக்க, சில யோசனைகளையும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
* சார்ஜ் போடுவதற்கு USB சார்ஜிங் நிலையத்தை பயன்படுத்த வேண்டாம்.
* முடிந்தவரை உங்களுடைய வாகனங்களில் உங்களுடைய USB சார்ஜரை வைத்து சார்ஜ் போடுங்கள்.
* எங்கு சென்றாலும் உங்களுடைய சார்ஜரை எடுத்து சென்று, அதை மட்டும் பயன்படுத்துங்கள்.
* தகவல்கள் பரிமாற்றப்படாமல் சார்ஜ் செய்வதற்கான கேபிள்களை வைத்து மட்டுமே சார்ஜ் செய்யுங்கள்.
* இலவசமாக கிடைக்கும் பொது வைஃபைகளை பயன்படுத்தாதீர். இலவச வைஃப்பைகள் மூலம் கூட குற்றவாளிகள் உங்களது தகவல்களை திருடக்கூடும்.