fbpx

தேதி குறிச்சாச்சு..!! இந்த உலகில் ஆண்களே இருக்க மாட்டாங்க..!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மனித இனம் பெருகுவதற்கு ஆண் – பெண் ஆகிய இருவரும் அவசியம். இந்த இனப்பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது க்ரோமோசோம்கள். ஆண்களுக்கு X, Y க்ரோமோசோம்கள் உள்ளன. அதேபோல் பெண்களுக்கு இரண்டு X க்ரோமோசோம்கள் உள்ளன. ஆண்களின் Y க்ரோமோசோமே ஆண் பாலினத்தில் இனப்பெருக்க உறுப்புகளை உருவாக்கும் மரபணுக்களை கொண்டுள்ளது. X உடன் ஒப்பிடுகையில், Y க்ரோமோசோம் சிறியதாக உள்ளது என்றாலும், இது கருவில் உள்ள டெஸ்டிஸ் ஆண் உறுப்பு விரைகளின் வளர்ச்சியை தூண்டுகிறது.

ஒரு பெண் கருத்தரித்த 12 வாரங்களில் பாலினத்தை நிர்ணயிக்கும் பகுதியான Y க்ரோமோசோமின் முதன்மை மரபணு, ஆண் இனப்பெருக்க உறுப்புகளை உருவாக்குவதற்கு மரபணு பாதையை செயல்படுத்துகிறது. இது குழந்தை ஆணாக வளர்வதை உறுதி செய்கிறது. இந்நிலையில், ஆண்களின் Y க்ரோமோசோம் குறைந்து வருவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அதாவது, கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம் அதன் சொந்த 1438 மரபணுக்களில் 1393-ஐ இழந்துவிட்டதாக மரபியல் பேராசிரியரான ஜெனிபர் ஏ. மார்ஷல் கிரேவ்ஸ் தெரிவித்திருக்கிறார். மீதமுள்ள மரபணுக்களும் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் அழிந்துவிடும் என தெரியவந்துள்ளது. ஆகையால், 10 மில்லியன் ஆண்டுகள் கழித்து முழுவதுமாக ஆண்கள் இனம் அழிந்துவிடலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

இந்நிலையில், Y க்ரோமோசோம் இல்லாத ஸ்பைன் எலியின் ஆண் பாலினத்தை மீட்டெடுக்க ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், Y க்ரோமோசோம் நகர்ந்து மற்ற க்ரோமோசோம்களுடன் இணைந்தது தெரியவந்தது. இது ஆண்களிடம் மட்டும் உள்ள மரபணு. இது பெண்களிடம் இல்லாதது. அதனால் காணாமல் போன Y க்ரோமோசோமின் SRY மரபணுவின் பங்கை இது எடுத்துகொள்கிறது. இதனால், Y க்ரோமோசோம் இல்லையென்றாலும் கூட அந்த இனத்தை அழியவிடாமல் தடுப்பதற்கு வழி இருக்கிறது என்பது ஆறுதல் தருகிறது.

ஆனாலும், இன்னும் மனிதர்களுக்கு இது செயல்படுத்திப் பார்க்கவில்லை என்பதால், எதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது. ஒருவேளை 10 மில்லியன் ஆண்டுகளுக்கு பின் ஆண் இனம் அழிந்துவிட்டால், அது மனித இனம் அழிவதற்கான முக்கிய புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : வெறும் வயிற்றில் இந்த ஒரு ஜூஸ் குடிங்க..!! சருமம் முதல் நோய் தொற்று வரை சரியாகும்..!!

English Summary

Concerns have arisen that after 10 million years, the entire male race may become extinct.

Chella

Next Post

கோவிட்-19 நோய்த்தொற்று இதய பாதிப்பை ஏற்படுத்தும்..!! - ஆய்வில் தகவல்

Thu Aug 29 , 2024
Covid-19 infections pose a greater risk to heart than vaccines: Study

You May Like