fbpx

சற்றுமுன்..! தென் மாவட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு…!

நெல்லை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்தது. கனமழை காரணமாக தென் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகளை பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட முடியவில்லை.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி, 6 முதல் 10 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற ஜனவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த 23ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை. அதன்பிறகு மீண்டும் வருகின்ற 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

Vignesh

Next Post

பிறந்தநாள் பார்ட்டியில் துப்பாக்கிச்சூடு!… 6 பேர் உயிரிழப்பு!… மெக்சிகோவில் பயங்கரம்!

Sat Dec 30 , 2023
வடக்கு மெக்சிகோவில் பிறந்த நாள் பார்ட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயம் அடைந்துள்ளனர். வடக்கு மெக்சிகோவின் சோனோரா என்ற மாகாணத்தில் உள்ள சிடெட் ஒபெகன் என்ற நகரத்த்தில் பார்ட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. 15-வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பலரும் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் […]

You May Like