fbpx

முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்து கொடுத்து 3 பேரை கொன்ற மருமகள்..!! ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கைது..!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மங்கலம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல்முருகன். இவர் விருத்தாச்சலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பூமாலை என்பவரின் மகள் கீதாவை (33) பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், கீதாவுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு பற்றி, கீதாவின் மாமியார் கொளஞ்சி மற்றும் மாமனார் சுப்பிரமணியனுக்கும் தெரியவரவே, மருமகள் கீதாவை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கீதா கடந்த 29.12.2021 ஆம் தேதி, தனது கணவரின் சொந்த ஊரான இலங்கியனூர் ஊருக்கு சென்று, கணவர் வேல்முருகன் மற்றும் மாமியார் கொளஞ்சி மாமனார் சுப்பிரமணியன் ஆகியோருக்கு முள்ளங்கி சாம்பாரில், எலி பேஸ்ட் கலந்து கொடுத்துள்ளார்.

அப்போது விஷ சாம்பாரை சாப்பிட்ட மாமியார் கொளஞ்சி, மாமனார் சுப்பிரமணியன், பக்கத்து வீட்டு பையன் பிரபு என்பவரின் 10 வயது சிறுவன் நித்தீஸ்வரன் ஆகிய மூவருக்கும் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, அடுத்தடுத்து மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி, கீதாவின் கணவர் வேல்முருகன், விருத்தாசலம் அடுத்த மங்களம் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு செய்த மங்கலம்பேட்டை காவல்துறையினர், விசாரணையை சரியாக செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் கால ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதனையடுத்து, சுமார் ஒன்றரை வருடம் கழித்து, சாம்பாரில் விஷம் வைத்து மாமியார், மாமனார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனை கொன்ற கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹரிஹரனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Chella

Next Post

ஷாக்கிங்..!! கேஸ் விலை ரூ.1800, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.170..!! அத்தியாசியப் பொருட்களின் விலை அதிரடி உயர்வு..!!

Thu May 25 , 2023
மணிப்பூரில் கலவரத்தை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களில் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170-க்கும், கள்ளச்சந்தையில் ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மணிப்பூரில், பெரும்பான்மையாக இருக்கும் ‘மெய்தி’ இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குமாறு கேட்பதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர். இது இருதரப்பினரிடையே கலவரமாக வெடித்தது. இதில், 70 பேர் பலியானார்கள். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட […]

You May Like