fbpx

ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த மகள்..!! செல்போன் மூலம் உடலை கண்டுபிடித்த அமெரிக்க தொழிலபதிர்..!!

ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மகளின் உடலை மொபைல் போன் மூலம் அமெரிக்க தொழிலதிபர் கண்டுபிடித்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்தவர் இயால் வால்ட்மேன். இவர், கணினி விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டில் இயால் வால்ட்மேன் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார். அவரது இளைய மகள் டேனிலா (24). இஸ்ரேலை சேர்ந்த நோம் என்பவரும் டேனிலாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

கடந்த 7ஆம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இசை விழாவில் டேனிலாவும் நோமும் கலந்து கொண்டனர். அப்போது ஹமாஸ் தீவிரவாதிகள் இசை விழாவில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 270 பேர் உயிரிழந்தனர். டேனிலாவும் நோமும் காரில் தப்பிச் சென்றனர். அவர்களை வழிமறித்த ஹமாஸ் தீவிரவாதிகள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

டேனிலாவின் தந்தை இயால் வால்ட்மேன் தொழில்ரீதியாக இந்தோனேசியாவில் முகாமிட்டிருந்தார். மகளின் ஐபோனில் இருந்து அவருக்கு அபாய எச்சரிக்கை அழைப்பு வந்தது. உடனடியாக விமானம் மூலம் இஸ்ரேலுக்கு திரும்பிய வால்ட்மேன், மகள் பயன்படுத்திய ஐபோனின் இருப்பிடத்தை கண்டறியும் வசதி மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்றார். அங்கு மகள் டேனிலா, அவரது காதலர் டோமின் உடல்களை மட்டுமே அவரால் மீட்க முடிந்தது.

Chella

Next Post

தனக்கு தானே ராஜாவாக வாழும்!… சிறுநீரால் தனது எல்லையை வகுக்கும்!… காடுகளின் காவலன் புலி குறித்த சுவாரஸ்ய தகவல்!

Wed Oct 18 , 2023
காடுகளை அழிவிலிருந்து காப்பதற்கும் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை தக்க வைப்பதற்கும் புலிகளின் தேவை இன்றியமையாதது. புலிகளின் இனத்தை பாதுகாப்பதற்கு 2010 முதல் ஜூலை 29ம் நாள் சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பூனை இனங்களில் பெரிய விலங்கு புலி. தனித்துவமான முகம், கம்பீர நடை, ஆரஞ்சு, வெள்ளை நிறம் கலந்த கருப்பு நிறத்தில் நூற்றுக்கணக்கான வரிகளை உடலில் கொண்டிருக்கும். வெளித்தோற்றத்தில் மிரட்டும் தோரணையும், அச்சுறுத்தும் ஆற்றல் உடையதாக தோன்றினாலும் பழகுவதற்கு […]

You May Like