fbpx

சுரங்க குழிக்குள் பிணைக் கைதிகளின் சடலம்..!! கதிகலங்கும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்..!!

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காஸாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது திடீர் போர் தாக்குதல் தொடுத்தது. தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,140 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அக்.7ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலின்போது, இஸ்ரேலில் இருந்து 250-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ராணுவத்தினர் பிணைக்கைதிகளாக பிடித்ததாகவும், அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிணைக் கைதிகளில் 105 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலின் பதில் தாக்குதலில் ஹமாஸ் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் பலர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அக்டோபர் 7ஆம் தேதி பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டவர்களில், 5 பேரின் சடலங்கள், ஹமாஸ் பதுங்கு குழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர்களின் சடலங்களை இஸ்ரேல் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கொடூரமாக கொலை செய்யப்பட்ட BSNL- உதவி பொறியாளர்.! முதல் மனைவி கைது.! நடந்தது என்ன.?

Mon Dec 25 , 2023
திருச்சி மாவட்டம் துறையூரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உதவி பொறியாளராக பணியாற்றிய நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது முதல் மனைவி கைது செய்யப்பட்டு இருக்கிறார். திருச்சி மாவட்டம் துறையூர் தேவாங்கர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(55). இவர் துறையூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு பத்மினி மற்றும் லலிதா என்ற இரண்டு மனைவிகள். இருவரும் ஒரே […]

You May Like