தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர், இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 7ஆம் வகுப்பும், 2-வது மகன் 5ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டில் பெற்றோர் மகனுக்கு உணவளித்துவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பெற்றோர் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது மகன் திடீரென மாயமாகி விட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனை அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். இந்நிலையில், மாயமான சிறுவனின் கழுத்தில் ஒன்றரை பவுனில் செயினும் 1 கிராமில் மோதிரமும் அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை சிறுவனை தேடியபோது, பக்கத்து வீட்டில் உள்ள மொட்டை மாடியில் சடலமாக கிடந்து உள்ளான். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டார், இதுகுறித்து போலீசாருக்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டனர். இதையடுத்து, மயங்கிய நிலையில் அசைவற்று கிடந்த சிறுவன் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து, பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து 6 மணி நேரமாகியதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனையில் சிறுவனின் உடலை கண்டு கதறினர்.
இந்நிலையில், மொட்டை மாடியில் சடலமாக கிடந்த சிறுவனின் வாய், ஆசனவாய் பகுதியில் காயங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் அணிந்திருந்த நகைகளும் மாயமாகியுள்ளன. சிறுவனின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவானையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Read More : கஞ்சா விற்பதில் முன்விரோதம்..!! இளைஞரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிய கும்பல்..!! அப்ப கூட வெறி அடங்கல..!!