கடந்த வாரம் மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனித விரலுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் வந்த புகைப்படம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சில நாட்களிலே, ஆன்லைனில் ஐஸ்கிரீம் வாங்கிய மற்றொறு நபருக்கு ஐஸ்கிரீமில் பூரான் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
இந்நிலையில், பிரமி ஸ்ரீதர் என்ற பெண் ஜெப்போ நிறுவனத்தில் சாக்லேட் சிரப்பை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி உள்ளார். அந்த சாக்லேட் சிரப்பில் இறந்த எலி கிடந்ததை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவு செய்தனர். அவர் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் கூறுகையில், “அந்த சாக்லேட் சிரப்பை கேக்குடன் சேர்த்து சாப்பிட்ட 3 சிறுமிகள் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் மயங்க மடைந்தார். பின்னர் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் தற்போது நலமுடன் உள்ளனர். ஜெப்டோவில் ஆர்டர் செய்து வாங்கிய சாக்லேட் சிரப்பை ஊற்றிய போது அதில் சிறிய அளவில் முடி கிடந்ததை பார்ததோம். உடனே நாங்கள் அதனை திறந்து சோதனை செய்தோம்” எனத் தெரிவித்தார். மேலும், குழந்தைகளுக்கு வழங்ககூடிய உணவுப் பொருட்களில் இது போன்று அஜாக்கிரதையாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது எனக் கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/C7hb-SdvtjS/?utm_source=ig_web_button_share_sheet
Read more ; மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்த விராட் கோலி..!! ரசிகர்கள் செம ஹேப்பி..!!