தாய் இறந்துவிட்டதாக தகனம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் திடீரென உயிருடன் வந்த சம்பம் கூடுவாஞ்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகரில் சந்திரா (72) இவர் கணவர் சுப்பிரமணி . சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி இறந்துவிட்டார். இந்நிலையில் சந்திரா குடும்பத்துடன் வசித்து வந்தார். அடிக்கடி கோவிலுக்கு செல்வது வழக்கம் . சிங்கப்பெருமாள் கோவிலுக்குத்தான் அடிக்கடி செல்வாராம். அதே போல கோவிலுக்குச் சென்றுள்ளார்.
காலை 8.30 மணிக்கு செங்கல்பட்டு – தாம்பரம் இடையே ரயில் தண்டவாளததில் வயதான மூதாட்டி இறந்துள்ளார். இது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. உறவினர்கள் சந்திராதான் இறந்துவிட்டதாக நினைத்தனர். எனவே அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உருவம் ஒத்துப் போனதால் உயிரிழந்தது தன் அம்மா என வடிவேலுவும் உறுதி செய்தார். உறவினர்களிடம் சந்திராவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
அடுத்தடுத்து அவர்களின் வீட்டில் சடங்குகள் ஆரம்பித்தது. சந்திராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் ஒட்டிவிட்டனர். மாலை இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையல் அடுத்த நாள் காலையில் வழக்கமாக படையல் போட்டுள்ளனர். அப்போது சந்திரா உயிரோடு வந்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியும் , மகிழ்ச்சியும் அடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தகனம் செய்யப்பட்ட உடல் யார் என விசாரித்து வருகின்றனர்.