fbpx

ரேஷன் அட்டைதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு!… எதற்கு தெரியுமா?

ரேஷன் அட்டைகளை ஆதாருடன் இணைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்கும் பணியை ஜூன் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதித் திட்டம், அந்தோதய யோஜனா திட்டத்தின் பயனாளிகள் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். வெள்ளை அட்டைதாரர்கள் முதலில் தங்களின் ரேஷன் கார்டை டிஜிட்டல் மயமாக்கி பின்னர் ஆதாருடன் இணைக்க வேண்டும்.

Kokila

Next Post

காபி, டீ ரொம்ப சூடாக குடிப்பவரா நீங்கள்?... இனி அந்த தவறை செய்யாதீங்க!... கேன்சர் வரும் அபாயம்!

Thu Jul 6 , 2023
எந்த ஒரு பானத்தையும் அதிக சூடாக அல்லது 60 டிகிரி செல்சியஸ்க்கு மேலான வெப்பநிலையில் 700 மில்லி லிட்டருக்கும் மேலாக தினமும் அறிந்தும் பட்சத்தில் உணவு குழாய் தொற்று நோய் ஏற்படும் அபாயம் 90% இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிக சூடாக டீ, காபியை தொடர்ந்து குடித்தால் உடல் நலனில் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியலிட்டுள்ளது. தொடர்ச்சியாக 60 செல்சியஸ் டிகிரிக்கும் […]

You May Like