தேர்வர்கள் தங்களின் Response Sheet-ஐ இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் UGC வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநில தகுதித் தேர்வு (TNSET) கணினி வழி தேர்வுகள் (CBT), மார்ச் 6 முதல் 9 வரை (2025) நடத்தி முடிக்கப்பட்டு, உத்தேச விடைக்குறிப்பு மார்ச் 13-ம் தேதி வெளியிடப்பட்டு, தேர்வர்கள் இணையவழியில் ஆட்சேபணை செய்ய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டது. தேர்வர்களிடமிருந்து பல்வேறு வழிகளில் பெறப்பட்ட கோரிக்கைகளை குழுக்கள் ஏற்படுத்தி பரிசீலனை செய்யப்பட்டது. இதனடிப்படையில் தொழில் நுட்ப பிழை காரணமாக (Technical Error) வெளியிடப்பட்ட உத்தேச விடைக்குறிப்புகள் திரும்பப் பெறப்படுகிறது.
எனவே, தற்போது மீண்டும் உத்தேச விடைக் குறிப்புகள் மற்றும் தேர்வர்களின் Response Sheet-ம் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் அவர்களின் Response Sheet-ஐ இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தேச விடைக்குறிப்புகள் மற்றும் தேர்வர்களின் Response Sheet-ன் அடிப்படையில் ஏதேனும் ஆட்சேபணை (Objection) தெரிவிக்க விரும்பினால் இணையவழி மூலமாக மட்டுமே ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும். ஆட்சேபணைகளை 27.03.2025 பிற்பகல் 6 மணி வரை தெரிவிக்கலாம். மேலும், பாடவல்லுநர்களின் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.