fbpx

Tn Govt: கிராமிய கலை பயிற்றுநர்கள் தொகுப்பூதிய பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்.‌‌.!

நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், தொடர்ந்து வருங்காலங்களிலும் கலைகள் செழித்தோங்கவும், கலை பண்பாட்டுத்துறையின்கீழ் இயங்கும் கல்லூரிகள், பள்ளிகள் என 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது. இம்மையங்களில் கிராமிய கலை பயிற்றுநர்கள் தொகுப்பூதிய பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பம் அளிக்கும் காலம் 31.3.2024 வரை நீட்டிக்கப்படுகிறது.

சென்னை, மதுரை. கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளிலும், சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட 25 இடங்களிலும் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது. இம்மையங்களில் ஒவ்வொரு இடத்திலும் நான்கு வகையான நாட்டுப்புறக் கலைகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடத்தப்படவுள்ளது. 25 நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்களிலும், ஒரு மையத்தில் நான்கு பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்றுநர்கள் என 100 பணியிடங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.7,000/-மதிப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளன.

தகுதியும், திறமையும் 25 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் அல்லது தகுதியும் திறமையும் கொண்ட 50 வயதிற்கு மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் இப்பணியிடத்திற்கு 31.3.2024 க்குள் விண்ணப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி நடைபெற உள்ள இடம், விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, விண்ணப்பம் ஆகியவற்றை (www.artandculture.tn.gov.in) கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில், துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதி வாய்ந்த கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Vignesh

Next Post

ADMK | "வேண்டவே வேண்டாம்னு சொன்னாரே இப்போ எப்படி"..? அதிமுகவுடன் கூட்டணி வைத்த முக்கிய பெண் பிரபலம்..!!

Sat Mar 16 , 2024
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். சிறு கட்சிகள் பலவும் இந்த இரண்டு கூட்டணிக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், அனைத்து மக்கள் கட்சி அரசியல் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. […]

You May Like