ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இணைக்காத பான் கார்டுகள் இன்றுமுதல் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கியமான ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. அதன்படி குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறிய உதவும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
தற்போது 1000 ரூபாய் அபராதத்துடன் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. நடப்பு ஆண்டு அபராதத்துடன் 2023ஆம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் தங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்திய பிறகே பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும். இந்தநிலையில் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ரூ.1000 அபராதத்துடன் ஆதார் – பான் கார்டு இணைப்புக்கான காலக்கெடு முடிவடைந்ததையடுத்து இன்றுமுதல் பான் கார்டு செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.