fbpx

அடுத்த ஆபத்து… காலநிலை மாற்றத்தால் கொடிய நோய்கள் ஏற்படலாம்… புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

காலநிலை மாற்றம் என்பது தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. காலநிலை மாற்றம் நமது கிரகத்தில் தொடர்ந்து அழிவை ஏற்படுத்துவதால், தொற்று நோய்கள் பரவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. ஆம்.. கோவிட் தொற்றுநோயை மிஞ்சும் வகையில் காலநிலை மாற்றம் தொற்றுநோயாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தால் ஏறக்குறைய ஒவ்வொரு நாடும் பாதிக்கப்பட்டுள்ளன.. வளர்ந்த நாடாக இருந்தாலும் சரி,, வளரும் நாடாக இருந்தாலும் சரி, பின் தங்கிய நாடாக இருந்தாலும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது..

இந்நிலையில் காலநிலை தொடர்ந்து வெப்பமடைவதால், அமெரிக்காவின் கடற்கரையோரங்களில் காணப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் அபாயகரமான நோய்த்தொற்றுகளின் பரவல் ஏற்படலாம் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அந்த பாக்டீரியா நோய் தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடல்நீரை தொடும் போது, உடலுக்குள் நுழையக்கூடிய சதை உண்ணும் பாக்டீரியா தொற்று பரவக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் கடந்த 30 ஆண்டுகளில் V. வல்னிஃபிகஸ் என்ற பாக்டீரியா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு வெளிப்படுத்துகிறது. V. வல்னிஃபிகஸ் என்பது ஒரு வகை பாக்டீரியா நோய்க்கிருமியாகும், இது சூடான மற்றும் குறைந்த உப்புத்தன்மை கொண்ட நீரில் செழித்து வளர்கிறது.. கடல்நீர் காரணமாக ஏற்படும் தொற்றுகள் அரிதானவை என்றாலும், அவை அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளன. கிழக்கு அமெரிக்காவிற்கான V. வல்னிஃபிகஸ் பாதிப்புகளின் 30 ஆண்டு தரவுத்தளத்தைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுற்றுச்சூழல் முக்கிய மாதிரியை உருவாக்கினர்.

அதன்படி காலநிலை மாற்றத்தால் கடல்நீர் வெப்பமடைவதால், பாக்டீரியாக்கள் செழித்து வளர பொருத்தமான சூழலை வழங்குகிறது. இதனால் இந்தப் பகுதிகளில் தனிநபர் மற்றும் பொது சுகாதார விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.. காலநிலை மாற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் இது பொது சுகாதாரத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் எடுத்துக்காட்டுகிறது..

Maha

Next Post

மூட்டுவலியால் அவதியா?... வெற்றிலையில் நெல்லி ரசம் குடியுங்கள்! அப்புறம் பாருங்க ரிசல்ட்டை!...

Thu Apr 13 , 2023
வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால் குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும். இந் நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிட த்தக்கது. வெற்றிலை நெல்லி ரசம் செய்யத் […]

You May Like