IMPS: நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாதமும் பல்வேறு நிதி சார்ந்த விதிமுறைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஐஎம்பிஎஸ் சேவையை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ரூ.15 வரை கட்டணம் செலுத்த வேண்டும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த மாற்றம் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன.
இன்றுமுதல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஆகவே, மே 1ஆம் தேதிக்கு பிறகு ஐஎம்பிஎஸ் மூலம் ரூ.1000-க்கும் கீழ் பணம் அனுப்பினால் ரூ.2.5 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல ரூ.1000 முதல் ரூ.25000 வரையில் அனுப்பினால் ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும், ரூ.25000 முதல் ரூ.5 லட்சம் வரையில் பணம் அனுப்பினால், ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும். டெபிட் கார்டு வருடாந்திர கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் அதுவே கிராமப்புறங்களில் ரூ.90ஆக எடுத்து கொள்ளப்படும். இந்த விதிகள் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
Readmore: அதிரடி..! மலைப் பகுதியில் 30 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை…!