fbpx

மரணம் நிச்சயம்..!! கொரோனாவை விட 100 மடங்கு பவர்ஃபுல்..!! நடுங்க வைக்கும் H5N1 வைரஸ்..!! அறிகுறிகள் என்ன..?

உலகளவில் பரவிய கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனாவின் முதல் அலை, இரண்டாம் அலை என இரு முறையில் இந்த நோய் பாதிப்பில் சிக்கி மீண்டவர்களும் உள்ளனர். பல லட்சம் பேரின் உயிரை பறித்த இந்த நோய், உலகளவில் பொருளாதாரத்தையும் நிலைகுலைய செய்தது. இந்த நோயின் ருத்ர தாண்டவம் தாங்காமல் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை பல மாதங்களுக்கு அறிவித்தது.

இந்தியாவில் 2020இல் தொடங்கிய கொரோனாவின் தாண்டவம், பல மாதங்களுக்கு தொடர்ந்தது. இதனால், கிடுக்கிப்பிடி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. அதன் பிறகுதான் நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனாவில் இருந்து மீண்டு தற்போதுதான் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் ஒரு கொடிய நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது என மருத்துவ அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனாவை விட 100 மடங்கு கொடிய நாேய்!

H5N1 என்ற புதிய பறவைக்காய்ச்சல், சர்வதேச நோய் பரவலாக மாறலாம் என மருத்துவ அறிஞர்கள் பகீர் கிளப்பியுள்ளனர். இந்த நோய் கொரோனா நோய் பரவலை விட 100 மடங்கு கொடியதாக இருக்கும் எனவும், இறப்பு விகிதமும் கொரோனாவை விட அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நோய் பாதிப்பு, உலகளவில் பரவுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

மருத்துவர்கள் கூறுவது என்ன?

மேற்குறிப்பிட்ட H5N1 பறவைக்காய்ச்சல், பாலூட்டி இன விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்த நோய் ஏற்கனவே பல்வேறு வகைகளில் பரவ ஆரம்பித்து விட்டதாகவும் இன்னொரு கொடிய நோய்க்கு நம்மை நாம் தயார் படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். டெக்ஸாசில் உள்ள ஒருவருக்கு H5N1 வைரஸின் ஒரு நோய் வகையான ஏவியன் இன்ஃப்ளுவன்ஸா என்ற பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், இது அவருக்கு மாடுகளிடம் இருந்து பரவியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நோய் பாதிப்பிற்கான எதிர்ப்பு சக்தி, மனிதர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ள அவர், இது மிகவும் கவலைக்குறிய விஷயம் என்றும் கூறியிருக்கிறார். இந்த நோய் பாதிப்பு, உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றியம், கடந்த புதன்கிழமை அன்று (ஏப்ரல் 3) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனாவை விட கொடிய நோய் பாதிப்பு

உலக சுகாதார மையத்தின் தரவுகளின் படி, 2003இல் இருந்து, H5N1 வகை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 பேரில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம், இந்த நோய் வந்தவர்களில் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளது. ஆனால், கொரோனா நோய் பாதிப்பின் போது உயிரிழப்பு விகிதம் 0.1 சதவிகிதமாக இருந்து, பின்னர் 20 சதவிகிதமாக மாறியது.

H5N1 ஃப்ளூ என்றால் என்ன?

இதனை உரையாடல் வழக்கில் பறவை காய்ச்சல் என கூறுவர். இந்த வைரஸ் நோய் பாதிப்பு பெரும்பாலும் பறவைகளைத்தான் தாக்கும். H5N1 வைரஸ், கோழி போன்ற பறவைகளை வளர்க்கும் பண்ணைகளில் இருந்து பரவுமாம். மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டி உயிரினங்களுக்கும் (Mammals) இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது. பறவையின் எச்சம் அல்லது நோய் பாதிப்பு ஏற்பட்ட பறவையுடன் நேரடி தொடர்பில் இருந்தால் இந்த நோய் எளிதில் பரவி விடும்.

H5N1 நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் :

* காய்ச்சல்

* இருமல்

* தொண்டை வலி

* குளிர் காய்ச்சல்

* மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள், இந்த நோய் பாதிப்பு ஏற்பட்ட மனிதர்களுக்கு காணப்படலாம்.

Read More : பெண்களுக்கு ரூ.1 லட்சம்..!! 100 வேலைத்திட்ட ஊதியம் ரூ.400..!! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

Chella

Next Post

திடீர் திருப்பம்..!! பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பு..? NIA கிடுக்குப்பிடி விசாரணை..!!

Fri Apr 5 , 2024
பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவக குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது என்.ஐ.ஏ., தீவிரமாக விசாரித்து வருகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை விசாரணை […]

You May Like