fbpx

உத்தரப்பிரதேச ஆன்மிக நிகழ்வு..! பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை நடத்தவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more | மழைக் காய்ச்சலுக்கும் டெங்குவுக்கும் என்ன வித்தியாசம்?. எச்சரிக்கை அறிகுறிகள் இதோ!

English Summary

A preacher called Bole Baba gave a spiritual discourse in Pulrai village in Hadras district of Uttar Pradesh. So far 134 people have died due to the stampede of this spiritual event.

Next Post

அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! அதுவும் இந்த மாவட்டங்களில்..

Thu Jul 4 , 2024
According to the Met Office, there is a possibility of moderate rain in 6 districts in Tamil Nadu in the next 3 hours.

You May Like