fbpx

பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு..!! தவெக தலைவர் விஜய் இரங்கல்..!!

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே இன்று அதிகாலை 3.00 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில், “கேரளத்தின் வயநாடு நிலச்சரிவின் சோகமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் துயரமுற்ற குடும்பத்தினருடன் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Read More : உங்களுக்கு அதிக கடன் இருக்கா..? அப்படினா இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!! சீக்கிரம் முடிஞ்சிரும்..!!

English Summary

Actor and Tamil Nadu Vethi Kazhagam President Vijay has condoled with the families of those who lost their lives in the Wayanad landslide.

Chella

Next Post

அபராதம் ரூ.5,000இல் இருந்து ரூ.10,000ஆக உயர்வு..!! மாட்டு உரிமையாளர்களே உஷார்..!!

Tue Jul 30 , 2024
The fine for cows roaming on roads in Chennai will be increased from Rs.5,000 to Rs.10,000.

You May Like