fbpx

முடிகிறது 2023!… இனி அடுத்தடுத்து பேரழிவுதான் நிகழும்!… வீனஸ் கிரகத்திற்கு மக்கள் செல்வார்கள்..! பாபா வங்காவின் கணிப்புகள்!…

2023ம் ஆண்டின் டிசம்பர் மாதம் முடிவடையவுள்ள நிலையில், 2024ம் ஆண்டில் என்ன நடக்கும் என்று பாபா வங்காவின் கணிப்புகள் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாபா வங்கா என்பவர், பல்கேரியாவை சேர்ந்த கண்பார்வையற்றவர் ஆவர். இவர் தனது 85 வயதில் 1996-ம் ஆண்டு இறந்துவிட்டார். இப்போதுவரை உலக மக்களால் மதிக்கப்பட்டு வருகிறார், காரணம், 12 வயதில் பார்வையை இழந்தவுடனேயே உலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல துவங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து சொன்னவர்.. இவர் சொன்னதில் 85 சதவீதத்துக்கும் மேல் பலித்திருக்கிறது. அவைகளில் பல சம்பவங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்து வருகின்றன.

2024ம் ஆண்டில் என்ன நடக்க போகிறது என்பது குறித்தும் பாபா வங்கா கணித்து வைத்திருக்கிறாராம்.. 2 மாதங்களுக்கு முன்பு, இதுகுறித்த சில தகவல்கள் வெளியாகியிருந்தன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 2024ம் ஆண்டில் தன்னுடைய சொந்த நாட்டை சேர்ந்த ஒருவராலேயே படுகொலை செய்யப்படுவார்.. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், 2024ம் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவார்.. அது அவரை காது கேளாதவர் ஆக்கும்.மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றெல்லாம் பாபா வங்காவின் கணிப்புகளை கேட்டு உலக மக்கள் அதிர்ந்து போனார்கள். இப்போது, பாபா வங்கா கணித்ததாக, மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024 ம் ஆண்டில், ரஷ்ய அதிபர் புதின் படுகொலை செய்யப்படலாம். அதுவும் அந்நாட்டு மக்கள் சதி செய்து அவரை படுகொலை செய்யலாம் என்று கணித்துள்ளார் வங்கா.

கொடிய புற்றுநோய்க்கான மருந்து 2024 ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்படும். இந்த புற்றுநோய் மருந்தால் உலகில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட போகிறது.. 2024ம் ஆண்டில் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்.
2024 ம் ஆண்டில் உலகில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பல முக்கியமான உள்கட்டமைப்புகளை குறி வைத்து ஹேக் செய்வார்கள். வரும் ஆண்டில் உலகம் காலநிலை தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.. பூகம்பம், வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்படும்” என்று கணித்துள்ளாராம் பாபா வங்கா. உயிரியல் தாக்குதல், பொருளாதார சிக்கல், காலநிலை அழிவு போன்ற மிகப்பெரிய அபாயங்கள் வரும் ஆண்டில் ஏற்பட உள்ளதாக வாங்கா கணித்துள்ளதால், அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், வரும் 2028ம் ஆண்டு, வீனஸ் கிரகத்துக்கு மக்கள் செல்வார்கள், 2046-ம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள், 2100 ஆண்டுக்கு பிறகு, செயற்கை சூரியஒளி உருவாக்கப்பட்டு, இரவு என்பதே பூமியில் இருக்காது என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

Kokila

Next Post

ரேஷன் கடைகளில் வந்தது புதிய வசதி..!! இனி பொருட்கள் ஈசியா வாங்கலாம்..!!

Thu Dec 14 , 2023
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவி மூலம் ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்து, நுகர்வோரின் விரல் ரேகை பதிவு செய்த பின்னர் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நேரங்களில் விரல் ரேகை பதிவை கருவி ஏற்றுக்கொள்வதில்லை. இதனால், பொருள் விநியோகத்தில் சிரமம் ஏற்படுகிறது. நீண்ட நேரம் வரிசையில் கால் கடுக்க நின்றுவிட்டு, பொருள் வாங்கும் நேரத்தில் விரல் ரேகை பதிவில் பிரச்சனை, ஸ்மார்ட் கார்டில் உள்ள […]

You May Like