fbpx

அரசு மருத்துவமனைகளில் குடும்ப நல அறுவை சிகிச்சைகளை நிறுத்த முடிவு..!! அதுவும் நாளை முதல்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாநகர சுகாதார அலுவலரை பணிநீக்கம் செய்யக்கோரியும், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைக்க கோரியும், மாநிலம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இரு கோரிக்கைகளுக்கும் இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு தெளிவான உறுதியும் அளிக்கப்படாமல் இருக்கும் நிலையில், உடனடியாக தீர்வு காண போராட்டங்களை தீவிரப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து டாக்டர் செந்தில் கூறுகையில், “போராட்டத்தின் அடுத்த கட்டமாக வரும் 12ஆம் தேதி முதல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் குடும்ப நல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப் போவதில்லை என்றும், குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்களை புறக்கணிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறினார்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட மருத்துவமனைகளில் குடும்பநல அறுவை சிகிச்சைகள் முக்கியமானவை. இதே சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்டால் ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவாகும். நடுத்தர, ஏழை மக்களால் இந்த தொகையை செலுத்தி அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாது. இதனால், இந்த சிகிச்சைகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் நிறுத்தினால் கர்ப்பிணி பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு அரசு உடனடியாக தலையீட்டு மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்திற்கும் இடையே நீடிக்கும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chella

Next Post

”காசா எல்லைப்பகுதியை ஹமாஸ் அமைப்பிடம் இருந்து மீட்டுவிட்டோம்”..!! இஸ்ரேல் அறிவிப்பு..!!

Wed Oct 11 , 2023
காசா எல்லைப்பகுதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 7ஆம் தேதி, காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதலை நடத்த தொடங்கினர். இந்த தாக்குதலில் இஸ்ரேல் திக்கு முக்காடிப்போனது. ராக்கெட் […]

You May Like