fbpx

அஜித் பிறந்தநாளையொட்டி தீனா, பில்லா திரைப்படங்கள் இன்று ரீ ரிலீஸ்

‘தல’ அஜித் இன்று தனது 53ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் நடித்த தீனா, பில்லா திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகிறது.

மே 1ஆம் தேதி இன்று அஜித்தின் பிறந்தநாள் என்பதால், அவர் நடித்து வெளிவந்த இரண்டு சூப்பர்ஹிட் திரைப்படங்கள் தீனா மற்றும் பில்லா ஆகிய படங்களை ரீ ரிலீஸ் ஆகிறது. சமீபகாலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெரிதாகி கொண்டே இருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய்யின் கில்லி திரைப்படம் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. 24 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கில்லி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. விஜய்யின் கில்லி படத்தின் ரீ ரிலீஸை தொடர்ந்து தற்போது அஜித்தின் படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது.

இந்த 2 திரைப்படங்களின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை தீனா மற்றும் பில்லா ஆகிய இரு திரைப்படங்களும் ரூ. 40 லட்சம் வரை ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More: பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏ! மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்க்கு மேலும் பின்னடைவு!

Rupa

Next Post

"உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்" - ஆண்டிபயாடிக் மருந்துகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்...!

Wed May 1 , 2024
பல்வேறு வகையான ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தாலும், முரண்பாடாக வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் (AMR) இறப்புக்கான முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. டாக்டர் அலெக்சாண்டர் ஃப்ளெமிங் கடந்த 1928-ஆம் ஆண்டு பென்சிலின் என்ற முதல் ஆண்டிபயாடிக் மருந்தை கண்டுபிடித்தார். இதற்கு முன் உலகளவில் ஏற்பட்டு வந்த மரணத்திற்கு மிகவும் பொதுவான காரணமாக தொற்றுகள் இருந்தன. தற்போது பல்வேறு வகையான ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில் […]

You May Like