fbpx

’மனித கடத்தலுக்கு எதிராக ஆழமான சட்டம் தேவை’..! திமுக எம்பி கனிமொழி

’மனித கடத்தலுக்கு எதிராக ஆழமான சட்டம் தேவை என்ற அழுத்தம் மத்திய அரசுக்கு இருக்கும் போதிலும் வலுவான மசோதாவை நிறைவேற்றாமல் உள்ளது’ என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

மனித கடத்தலுக்கு எதிரான உலக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற திமுக குழு துணை தலைவர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குனர் ரத்னா, மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட கொத்தடிமை நலச் சங்கத்தினர், மனித கடத்தல் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

’மனித கடத்தலுக்கு எதிராக ஆழமான சட்டம் தேவை’..! திமுக எம்பி கனிமொழி

இவ்விழாவில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மாணவர்களுக்கு நேர திட்டமிடல் மிக முக்கியம். சமூகவலைதளங்களில் மூழ்கி போகாமல் சரியான திட்டமிடலோடு செயற்பட வேண்டும். செய்திகள், நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து பாருங்கள். ஆனால், பெண்களை அடிமைகளாக தவறாக சித்தரிக்கும் நாடகங்களை தவிருங்கள். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி., ”உலகளவில் மனித கடத்தல் நடைபெறுவதாகவும், மனித உறுப்பு திருட்டு, பாலியல் தொழில் உள்ளிட்டவைகளில் ஈடுபடுத்த மனித கடத்தல் இருப்பதாகவும், வளர்ந்த நாடுகளிலும் கொத்தடிமை முறை இருப்பதாகவும் தெரிவித்தார். இன்ஸ்டாகிராமில் எனக்கு லைக்ஸ் வரவில்லை என வருத்தப்படக்கூடிய காலகட்டமாக உள்ளது. இதற்கான அழுத்தம், விரயம், மன உளைச்சலை எல்லாம் குறைத்துக்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ”பாஜக அரசாங்கத்தின் போக்கை கண்டுத்து தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறோம் எனவும், முதலமைச்சர் பிரதமரை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதற்காக பிரதமரும் கலந்துகொள்கிறார். அதற்கும், கட்சி கூட்டணிக்கும் முடிச்சுபோடுவது அர்த்தமில்லாதது” என்றார்.

Chella

Next Post

”இடியும் தருவாயில் உள்ள அரசுப் பள்ளிகளை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

Sat Jul 30 , 2022
மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஏற்காட்டில் எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ள துவக்கப் பள்ளியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இடியும் தருவாயில் உள்ள அரசுப் பள்ளிகளை இடித்துவிட்டு புதிதாக கட்டவும் நடவடிக்கை […]
’Resign Anbil Mahesh’ ஹேஷ்டேக் எதிரொலி..? கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் நிறுத்திவைப்பு..! - அமைச்சர்

You May Like