fbpx

’ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது’..!! வானிலை ஆய்வு மையம்..!!

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கட்கிழமை காலை உருவானது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

மேலும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலைக்குள் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மே 10ஆம் தேதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் புயலாக மாறும். இது மே 12ஆம் தேதி காலை வரை முதலில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அதன்பிறகு, இது படிப்படியாக மீண்டு, வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம், மியான்மர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஷாக்கிங்..!! பணிநீக்க நடவடிக்கையை கையிலெடுத்த LinkedIn நிறுவனம்..!! பேரதிர்ச்சியில் ஊழியர்கள்..!!

Tue May 9 , 2023
அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா போன்ற பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பிரபல ப்ரொபஷனல் சமுக வலைத்தளமான LinkedIn நிறுவனமும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பல மென்பொருள் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது வாடிக்கையாகவே கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமேசான், ட்விட்டர், […]
ஷாக்கிங்..!! பணிநீக்க நடவடிக்கையை கையிலெடுத்த LinkedIn நிறுவனம்..!! பேரதிர்ச்சியில் ஊழியர்கள்..!!

You May Like